தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, தற்போது ரூ.40 கோடி சம்பளம் கொடுத்தும் ஒரு படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். நோட்டா என்ற தமிழ் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் டியர் காம்ரேட் என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ...
Read More »குமரன்
முஸ்லிம் தலைமைகளின் இராஜினாமா நாடகம்!
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அமீரலி, அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் ஜுலை 29ஆம் திகதி மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பைசால் காசிம், ஹரிஸ், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் களையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. ...
Read More »பிலிப்பைன்ஸ்: படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முறை கடற்புயல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் பெருமழையும் பெய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும். எனவே, யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடல் மார்க்கமாக படகுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் ...
Read More »இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா!
வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து ...
Read More »துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவரை நேரில் பார்த்தேன்!
அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை நேரில் பார்த்தேன் என எல்பசோவை சேர்ந்த வனேசா சயின்ஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். முதலில் சத்தம் கேட்டவேளை நான் பட்டாசுகள் என நினைத்தேன் ஆனால் வணிக வளாகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்வதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் அந்த சத்தங்கள் வேறு மாதிரியானவையாக தோன்றுகின்றன என தெரிவித்ததை தொடர்ந்து நான் வோல்மார்ட்டிற்குள் நுழைந்து அங்கு மறைந்திருக்கலாம் என நினைத்து உள்ளே நுழைந்த வேளை நபர் ஒருவரை ...
Read More »வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்!
சைவத் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைத்தலை நிறுத்துதல், வடகிழக்கில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டம் நடைமுறைப்படுத்துவதை தடை செய்தல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை இந்து அமைப்புக்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது. அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நல்லை ஆதீனம் முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் பேசும் ...
Read More »நல்லூர் பாதுகாப்பிற்காக 8 சோதனைக் கூடங்கள் !
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று நேரில் ஆராய்ந்தனர். அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 25 நாட்கள் ...
Read More »துப்பாக்கி சுடுதல் போட்டி – கோவையை அடுத்து மத்திய பிரதேசத்தில் கால் பதிக்கும் அஜித்
கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற நடிகர் அஜித், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நடிகர் அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக ...
Read More »உறவுகளை தேடி 10 வருடங்களாக போராடும் மக்கள்!
தமது அன்புக்குரியவர்களை தொலைத்துவிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு கோரி போராடிக்கொண்டிருக்கும் காணாமல்போனவர்களின் உறவுகள் தற்போது பாரிய விரக்திநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். தமது காணாமல்போன உறவுகளை மீண்டும் காணவே முடியாதா, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாதா, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இந்த மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். யுத்தகாலத்திலும் அதன் முடிவிலும் இவ்வாறு பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் சுமார் 19ஆயிரம் முறைப்பாடுகள் எழுத்துமூலம் காணப்படுகின்றன. கடந்த ...
Read More »மனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா!
மனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வலைப்பின்னலை விசாரிப்பதற்காக காவல்துறை மற்றும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பு சந்திப்பில் இதனை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
Read More »