அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை நேரில் பார்த்தேன் என எல்பசோவை சேர்ந்த வனேசா சயின்ஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
முதலில் சத்தம் கேட்டவேளை நான் பட்டாசுகள் என நினைத்தேன் ஆனால் வணிக வளாகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்வதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது தாயார் அந்த சத்தங்கள் வேறு மாதிரியானவையாக தோன்றுகின்றன என தெரிவித்ததை தொடர்ந்து நான் வோல்மார்ட்டிற்குள் நுழைந்து அங்கு மறைந்திருக்கலாம் என நினைத்து உள்ளே நுழைந்த வேளை நபர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கிருந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார் மூன்று நான்கு பேர் விழுந்து இறப்பதை பார்த்தேன் அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் எனவும் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை நேரில் பார்த்த வோல்மார்ட் ஊழியர் ஒருவர் தனது அச்சமூட்டும் அனுபவத்தினை விபரித்துள்ளார்.
முதலில் சத்தங்கள் கேட்டவேளை தான் பெட்டிகள் விழும் சத்தம் என நினைத்ததாக அந்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.
எனினும் சத்தங்கள் அருகில் கேட்க தொடங்க நான் உண்மையை உணரத்தொடங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நானும் எனது சக பணியாளரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் அச்சமடைந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னால் என்னால் முடிந்தளவிற்கு அங்கு காணபட்டவர்களை வெளியேற்றினேன் பெற்றோரை தவறவிட்ட குழந்தையை கூட வெளியேற்றினனேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கி தாக்குதல்களை மேற்கொண்ட நபர் வணிகவளாகத்தில் காணப்பட்டவர்களை சுற்றிவளைத்து ஓரிடத்தில் வைத்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் ஒருவன் அமெரிக்காவின் எல்பசோ நகரின் வணிக வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றுத என எச்சரித்தான் ஆனால் எவனும் அவன் சொன்னதை கருத்திலெடு;க்கவில்லை என மற்றுமொரு வணிகவளாகத்தில் காணப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் வோல்மார்ட் துப்பாக்கி தாக்குதல் சம்பவத்தில் 20 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சிலோ விஸ்டா வணிகவளாகத்தில் விளையாட்டு பொருட்கள் காணப்படும் இடத்தில் தான் நின்றுகொண்டிருந்தவேளை குழந்தையொன்று ஓடிவந்து வோல்மார்ட்டில் துப்பாக்கிதாரி பிரயோகம் இடம்பெறுகின்றுத என தெரிவித்தது என கிளென்டன் ஓக்லி என்பவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குழந்தையின் வயது காரணமாகவும் அருகிலுள்ள வோல்மாட்டிலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்ததன் காரணமாகவும் அந்த குழந்தை தெரிவித்ததை யாரும் தீவிரவமாக எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு சில நிமிடங்களின் பின்னர் துப்பாக்கி பிரயோகங்களை தான் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal