Tag Archives: ஆசிரியர்தெரிவு

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ...

Read More »

மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்

தமிழ் பேசும் அத்தனை உறவுகளின் அபிலாசைகளின் வெளிப்பாடுதான் பேரணி வெற்றிபெற்றது. நாம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை இங்கு அங்குரார்ப்பணம் செய்கிறோம் என தவத்திரு வேலன்சுவாமி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரு வெற்றியாக தாயகத்திலும் சர்வதேசத்திலும்& கவனத்தை ...

Read More »

நியூசிலாந்து, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஜி, நியூசிலாந்து மற்றும் வனுவாட்டுவின் சில கடலோர ...

Read More »

குருந்தூர் மலையில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிப்பு

தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடம்பெற்று வரும் முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வின் போது சிவலிங்கத்தை ஒத்த இடிபாடு ஒன்று வெளிப்பட்டுள்ளது. ஆதி ஐயனார் ஆலயம் இருந்த பகுதியில் அண்மையில் புத்தர் சிலை வைத்து தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியல் அகழ்வாராச்சி ஆரம்பட்டது.

Read More »

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ’.lk’ பதிவு

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ‘டொட் எல்.கே’ டொமைனை பதிவு செய்ய நடவடிக்கை  எடுப்பதாக இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை முதல் .LK இணைய முகவரிகள் பல செயலிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு உள்ளான சில இணையதளங்களின் முகவரிகளை, வேறு இணையதளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சைபர்  தாக்குதலுக்கு  உள்ளான இணையத்தளங்களில் தரவுகள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Read More »

சிறிலங்கா ஜனாதிபதி மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார்

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் அடங்கிய குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரட்ண உட்பட பலரின் சிவில் உரிமையை அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தி பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ...

Read More »

ஆரம்பமானது அவுஸ்திரேலிய ஓபன்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரானது இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பான் வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னில் பட்டத்தை வென்ற ஒசாகா, ரோட் லாவர் அரங்கில் நடந்த போட்டியின் முதல் போட்டியில் விளையாடி, அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் மெல்போர்னில் நடந்த காலிறுதிக்கு முன்னேறிய தரவரிசையில் ...

Read More »

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இலக்கை அடைந்தது

அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது. வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின. தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர். இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதியில் நினைவுக் ...

Read More »

எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம்!

கடந்த பத்து வருடங்களாக பிழையான திசைக்கு இந்த அரசியலை கொண்டுசென்ற தரப்புகள் கூட தவிர்க்க முடியாமல் இன்று சரியான பாதைக்கு – தமிழ்தேசத்தை அங்கீகரிக்கின்ற,ஒரு இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை கோருகின்ற,ஒரு பாதைக்கு வந்திருக்கின்றது,இந்த நிலைமை மேலும்பலப்பட எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம். ஏன தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான இந்த நடைபயண போராட்டம் காலை 8 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று ...

Read More »

தமிழர் அடக்குமுறைநாள் பேரணி – மெல்பேர்ண்

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடிய வேளையில் அதனை தமிழர் அடக்குமுறை நாள் என பிரகடனப்படுத்தி பல்லின மக்களின் ஆதரவுடன் போராட்டம் மெல்பெர்னில் இன்று நடைபெற்றது. 1948 பெப்ரவரி 4ஆம் நாள் பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறப்பட்ட நிலையில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏனைய இனத்தவர் மீது வன்முறைகளை ஏவத்தொடங்கியது. எண்ணிலடங்கா அடக்குமுறைகளை பல்வேறு வழிகளில் மக்கள் மீது ...

Read More »