அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது.
வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின. தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர்.
இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதியில் நினைவுக் கல்லொன்றை நாட்ட திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த கல் சதிமுயற்சியால் அங்கிருந்து எடுத்துச் செல்லபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று மாலை 6.40 மணிக்கு சென்றடைந்தது.
வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின.
தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர்
எனினும் திட்டமிட்டபடி கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை பொத்துவிலில் கொட்டும் மழையில் பேரணி ஆரம்பமாகி, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.
பேரணிக்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கி எந்தவொரு குழப்பநிலைகளும் ஏற்படாது இடம்பெற்றது இந்து, கிறிஸ்தவ மதகுருமார்கள் முன்னின்று பேரணியை நடத்தினர்
பொலிஸாரின் தடைகளும் சில விசமிகளின் கல்லெறி, ஆணிகளைத் தூவி வீதிகளில் தடை ஏற்படுத்தப்பட்ட போதும் மக்கள் எழுச்சியால் அவை பயனற்றுப் போய்விட்டன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது வாழ்வுரிமைக்கும் போரின் பின்னரும் தொடரும் அடக்குமுறைக்கும் எதிராக கிளந்தெழுந்தனர்.
அதனால் தனது இலக்கை பேரணி அடைந்தது. குறுகிய நாள் அழைப்பில் மக்கள் தமது பேராதரவை வழங்கி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமது வாழ்வுரிமையை ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.
அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வட, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal
