Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்: சிட்னியில் அதிகரிக்கும் தொற்று

ஆஸ்திரேலியாவை கரோனா டெல்டா வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அன்றாட தொற்று வேகமெடுத்து வருகிறது. சிட்னி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அந்நாடு பரிசீலித்து வருகிறது. இது குறித்து, நியூசவுத் வேல்ஸ் மாகாணத் தலைவர் கிளாடிஸ் பெர்ஜிக்லியான் கூறும்போது, “டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவல்தன்மை அதிகம். ஆகையால் மக்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது ...

Read More »

வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசிற்கு கொலை மிரட்டல்

யாழ்மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோசிற்கு மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட வாகனத்தில் வந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் அவரை கற்களால் தாக்க முயற்சித்துள்ளனர். இது தொடர்பில் தியோகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். நான் எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி ஊடாக பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை ஊடாக சென்றுகொண்டிருந்தபோது-எங்களிற்கு பின்னர் வந்துகொண்டிருந்த மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட பிபீ 0595 என்ற அதிசொகுசு பிக்கப்பில் வந்த பத்துபேர் என்னை அச்சுறுத்தினார்கள். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக காணப்படுகின்ற பகுதியில் மிக ...

Read More »

அடுத்த பிரமர் நாமல் ராஜபக்சவா?

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதுமாக திறக்கப்படும்போது துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் திறமை வாய்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கவேண்டும் என ஜனாதிபதி விரும்புகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதையும் சில அமைச்சுகளின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதையும் ஜனாதிபதி கருத்தில் எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறப்பாக செயற்படாத சிரேஸ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் அல்லது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி

அவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பலியானவர் காலி மஹிந்தா கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான குஷான் நிரோஷன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 06.00 மணிக்கு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ள தாக அந்நாட்டு வைத்திய சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Read More »

தடுப்பூசி போட்டிருந்தால் ஒரு beer இலவசம்

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கப்படும் என்ற மெல்பன் pub ஒன்றின் அறிவிப்பிற்கு பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையம் இயங்க ஆரம்பித்ததையடுத்து, கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் செயன்முறையை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது. ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமான Therapeutic Goods Administration (TGA) இதற்கு தடைவிதித்தது. TGA-இன் இத்தீர்மானம் நியாயமானது என்றாலும் தற்போதைய சூழலில் ...

Read More »

இந்தோனேசியாவில் ஒரேநாளில் கொரோனா வைரசினால் ஆயிரம் பேர் மரணம்

இந்தோனேசியாவில் முதல்தடவையாக கொரோனாவைரசினால் ஒரே நாளில் ( புதன்கிழமை) ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவாவில் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க கூடிய எல்லையை கடந்துவிட்டன ,ஆறுநகரங்களில் ஒக்சிசனிற்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இதேவேளை இந்தோனேசியாவின் பல பகுதிகளில் புதிதாக வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது என்ற அச்சமும் உருவாகியுள்ளது. சிவப்பு வலயங்கள் என குறிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் அதிகாரிகள் பொதுமக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுபாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ...

Read More »

விடுதலைப் புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்த இளைஞர் கைது

விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் குற்றங்களைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகராசா பிரபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் 27 1/2 அங்குல நீளமும் 11/4 அங்குல அகலமும் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட வாள் ஒன்றை வைத்திருந்ததாகவும் சிம் அட்டைகளுடன் கூடிய ...

Read More »

யாழில் 16 பேர் உட்படவடக்கில் 32 பேருக்கு கொவிட் தொற்று!

யாழ்ப்பாணத்தில் 16 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 27 பேரும், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் ஆறு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 418 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 10 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 10 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,பருத்தித்துறை ஆதார ...

Read More »

டெல்டாவை விட அதிக பாதிப்பை உருவாக்கும் லாம்ப்டா வைரஸ்

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்து ஆண்டு உலகமே ஸ்தம்பித்தது. பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து, உலகம் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தென்ஆப்பிரிக்காவில் ...

Read More »

யாழில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் : யாழ். அரச அதிபர்

கொரோனாத் தொற்றுப் ப ர வ லால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்டஅரச அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ். மா வ ட் ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட த ம்பாட்டி கிராமம், ச ண் டி லி ப் பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கி ராம அலுவலர் பி ரி வு ம் , காரை ந க ...

Read More »