கொரோனாத் தொற்றுப் ப ர வ லால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்டஅரச அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ். மா வ ட் ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட த ம்பாட்டி கிராமம், ச ண் டி லி ப் பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கி ராம அலுவலர் பி ரி வு ம் , காரை ந க ர் பி ர தேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள், கரவெட்டியில் ஒரு கிராமும், குருநகரில் இரண்டு கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சண்டிலிப்பாய் பி ர தேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
அதேவேளை, இம்மாவட்டத்தில் 5 ஆயிரத்து 238 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 703 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர். கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 103 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி நடவடிக்கைகள் இரண்டாம் கட்டமாக முதல் தரம் வழங்கும் பணிகள் தற்போது இட ம் பெ ற்று வருகின்றன.முதலாவதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறும்.
மக்கள் எமது அறிவுறுத்தலுக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முன்களப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து தடுப்பூசிகள் இந்த வாரத்துக்குள் செலுத்தப்படவுள்ளது. எல்லா முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போடு செயற்பாட்டுக்கு உள்வாங்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்வோருக்குஅடுத்த கட்டத்தில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த இரண்டாம் கட்டத்துக்கான முதலாவது தடுப்பூசி முடிவடைந்ததும் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசி யாழ்ப்பாணமாவட்டத்திற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். ஆகவே, இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்பவர்கள் தங்களுடைய பிரதேச செயலகப் பிரிவில் இருக்கின்ற நிலையங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். அங்கு தேவையற்ற நெரிசலைத் தவிர்த்து இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.