Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழரசுக்கு தாவுகின்றார் தவராசா!

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினில் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்துள்ளார்.இதன் பிரகாரம் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் பின்னர் நாடாளுமன்ற தேர்தலிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையினில் நம்பிக்கை அடிப்படையினில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிடம் முதலமைச்சர் மற்றும் உதவியாளர்கள் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் சுமந்திரனிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஈபிடிபி சார்பினில் போட்டியிட்டு வடமாகாணசபைக்கு வந்திருந்த சி.தவராசா தற்போது கட்சி தலைமையுடன் முரண்பட்டு வெளியே உள்ளார்.தற்போதுள்ள எதிர்கட்சி தலைவர் பதவியினை பறிக்க ...

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். கந்தர்மடம் மணற்தரையில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தலில் தோற்றுபோன தரப்பினர் என கூறியது தொர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை ...

Read More »

நிபந்தனையுடன் மக்களைச் சந்திக்கும் சுமந்திரன்குழு!

அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை எச்சரிக்கையுடன் அணுகுவதற்கும் தலைப்பட்டுவருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது. இளைஞர் அணிக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட சந்திப்புக்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் மக்கள் சந்திப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலியில் நாளை ஏற்பாடாகியிருக்கின்ற ...

Read More »

27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மக்கள் வசம்

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இதன்படி மக்கள், 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளமையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Read More »

புதிய அரிச்சந்திரனான வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்!

மத்திய அரசின் சட்டபூர்வமான விசாரணைக்குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் தானாக ஆஜராகி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தானே சமர்ப்பித்து விசாரணைக்கு உட்பட்டு தனது புனிதத்தை வெளிப்படுத்தப்போவதாக புதிய அரிச்சந்திரனான வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர். ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் ...

Read More »

பழிவாங்கப்படுகின்றோம் – பிலவுக்குடியிருப்பு மக்கள்

முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையான ஒரு மாத காலம், விமானப்படையினருக்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டது. ...

Read More »

காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் அலுவலகத்தின் கடமை!

காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கடமையென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த அலுவலகத்தினூடாக யாருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த அலுவலகம் தொடர்பாக பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக யுத்த காலப்பகுதியின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதே பிரதான கடமையும் அதிகாரமும் ...

Read More »

தமிழீழ மண்ணில் நம்பிக்கைக்கு உரிய ஒரு தலைவராக விக்னேஸ்வரன்!- காசி ஆனந்தன்

தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன் அவர்களை உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்கள் நன்றி உணர்வோடு பார்க்கிறார்கள், அவர்மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர முயன்ற தமிழரசுக்கட்சியை அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.என்கிறார் தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிவரும் இந்திய ஈழத்தமிழர் நட்புறவு இயக்கத்தின் தலைவர் காசி ஆனந்தன் . அண்மையில் வெளியாகி உள்ள ஓர் அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறி இருப்பதாவது , தந்தை செல்வாவின் தலைமையில் அறப்போராட்ட காலத்திலும் தலைவர் பிரபாகரன் ...

Read More »

முதல்வருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம்!

வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வடக்கு பூராகவும் போராட்டங்களுகளும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று((17) முல்லைத்தீவில் சுற்றுவட்ட வீதியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் கூட்டம் கச்சேரிக்கு முன்பாக தமிழரசு கட்சிக்கு எதிராகவும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்ககையில் ”உங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி நாங்கள். உங்கள் முடிவே எங்களின் முடிவு. உங்களின் சார்பாக விக்னேஸ்வரனுக்கு துணை நிற்போம்” என்று ...

Read More »

இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால்

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சருக்கெதிராக தமிழரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதையடுத்து நேற்றைய தினம் முதலமைச்சர் இல்லத்திற்கு முன்னால் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இன்று கர்த்தால் அனுட்டிக்க அறைகூவல் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கூடாநாட்டில் மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன. இதற்கு, வணிகர் ...

Read More »