தமிழரசுக்கு தாவுகின்றார் தவராசா!

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினில் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்துள்ளார்.இதன் பிரகாரம் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் பின்னர் நாடாளுமன்ற தேர்தலிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையினில் நம்பிக்கை அடிப்படையினில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிடம் முதலமைச்சர் மற்றும் உதவியாளர்கள் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் சுமந்திரனிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

ஈபிடிபி சார்பினில் போட்டியிட்டு வடமாகாணசபைக்கு வந்திருந்த சி.தவராசா தற்போது கட்சி தலைமையுடன் முரண்பட்டு வெளியே உள்ளார்.தற்போதுள்ள எதிர்கட்சி தலைவர் பதவியினை பறிக்க ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் முற்பட்டபோதும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தவரசாவை காப்பாற்றியிருந்தார்.

இதன் பின்னராக தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமற்ற உறுப்பினராகியிருக்கும் சி.தவராசா தனது விசுவாசத்தை அண்மைய ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது காட்டியிருந்தார்.

அத்துடன் மாகாணசபை குழப்பங்களை தீர்க்க நடுநிலைமையாக உள்ள தனக்கு முதலமைச்சர் பதவியினை தருவதே பொருத்தமானதென தனது சகபாடிகள் மூலம் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்.

இந்நிலையினில் இவற்றின் பின்னணியினில் தற்போது முதலமைச்சருக்க குடைச்சல் கொடுக்கும் முக்கிய பணியினில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவும் களமிறக்கப்பட்டுள்ளார்.