Tag Archives: ஆசிரியர்தெரிவு

எனது கணவர் முன்னாள் போராளி அல்ல!-மனைவி டெனீசியா

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் நேற்று (25 ) காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபரின் மனைவி டெனீசியா தனது கணவர் முன்னாள் ...

Read More »

லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட,சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மீண்டும்  8 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று (25)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More »

மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்று எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட போது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர். குறித்த இரண்டு இளைஞர்களும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் எஸ்.மதுசன் ...

Read More »

“இன்னும் இரு பௌர்ணமி பின்னர் பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது.!” – மஹிந்த ராஜபக் ஷ

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் ...

Read More »

மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம்!

டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சியால் (ரெலோ)    கோரப்பட்டதற்கு அமைய  அக்கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் குறித்த முடிவு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதே வேளை பரவலாக வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கல்வி  அமைச்சு சர்வேஸ்வரனுக்கும் மகளிர் ...

Read More »

நிரூபித்தால் பதவி விலகுவேன்!-சிறீதரன்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். கிளிநொச்சி குணாவில் பகுதியில் நேற்று மலையக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால் அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் ...

Read More »

காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது!

புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும் காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது என்ற ரெலோவின் கடிதமானது, கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமேயானது என்பதையும் செயலளவில் எல்லாமே தமிழரசுக் கட்சிதான் என்பதையும் அர்த்தமாக்குகிறது. மழைவிட்டும் தூவானம் போகவில்லை என்றொரு பழமொழியுண்டு. ஆனால், தமிழ் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட வடமாகாண சபையின் பிரச்சனையைப் பொறுத்தளவில், மழையைவிட தூவானமே புயலாக வீசுவதைக் காணமுடிகிறது. கடந்த மாதம் 14ம் திகதி வடமாகாண சபை அமைச்சர்கள் நீக்கம் மற்றும் ...

Read More »

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம்! -சம்மந்தன்

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அவர், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். ...

Read More »

இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு

யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று ...

Read More »

துன்னாலையில் பதற்றம்! வீதியில் ரயர் கொளுத்தி மக்கள் போராட்டம்!

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கரவெட்டி கலிகை சந்தி உள்ளிட்ட பகுதிகளினில் மக்கள் போராட்டங்களினில் குதித்துள்ளனனர்.துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக இரு காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமுள்ளனர். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வடமராட்சி கிழக்கு குடத்தனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று பிற்பகல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இசசம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்நிலையத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு ஒரு உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப காவல்துறை அதிகாரிகளான உப பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் ...

Read More »