தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal