டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சியால் (ரெலோ) கோரப்பட்டதற்கு அமைய அக்கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஓரிரு நாட்களில் குறித்த முடிவு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதே வேளை பரவலாக வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கல்வி அமைச்சு சர்வேஸ்வரனுக்கும் மகளிர் சமூக அமைச்சு அனந்தி சசிதரனுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.