Tag Archives: ஆசிரியர்தெரிவு

தலைவர் பிரபாகரன் இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார்!

தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்தெசரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்குவழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என கோத்தா குறிப்பிட்டார். எனினும் பிரபாகன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. ...

Read More »

சம்பந்தன் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது. எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதே ...

Read More »

கடற்­படை மீதான போர்குற்றங்களை மறுக்கின்றேன்! -கடற்­படை தள­பதி

இலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவர்­களை தண்­டிப்­பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார். நான் ஒரு அமெ­ரிக்க உள­வாளி அல்ல. இந்த குற்­றச்­சாட்டை நான் மறுக்­கிறேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய கடற்­படை தள­ப­தி­யாக கடமை பொறுப்­பேற்­றுள்ள வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா நேற்று கடற்­படை தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்த போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில், கடற்­ப­டையில் ...

Read More »

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவையை மீள உரு­வாக்­கு­வதில் சிக்கல்!

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவையை மீள உரு­வாக்­கு­வது மேலும் மேலும் சிக்­க­லா­கிக் கொண்டே செல்­கி­றது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் புதிய அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தில் காட்­டும் தேர்வு முறைமை கட்­சி­க­ளு­டன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தால் தெளி­வான ஓர் அமைச்­ச­ரவை அமை­வது இன்­ன­மும் முடி­வா­க­ வில்லை. முதன் முத­லில் தான் அமைத்த அமைச்­ச­ர­வை­யைக் கலைத்­து­விட்­டுப் புதி­தாக ஒன்றை அமைக்க முத­ல­மைச்­சர் விரும்­பி­னார். முதல் அமைச்­ச­ர­வை­யில் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்த இரு அமைச்­சர்­கள், ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் சிக்­கிக்­கொண்டு பதவி வில­க­வேண்டி ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்­தார். ஆனால், ...

Read More »

வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – முறைப்பாடுகளைத் தெரிவிக்க இலக்கங்கள்!

2017 ஆம் ஆண்டுக்கான வருடத்திற்கான வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பப் பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், அதற்குரிய ஆவணங்கள் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை, மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், கிராம அலுவலர் காரியாலயங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் பெயர் பட்டியலில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பிலான எதிர்புக்களைத் தெரிவிக்க, எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெயர் பட்டியலில் தமது பெயர்கள் இடம்பெறாதவர்களும் இந்தச் ...

Read More »

விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டாம் – தேரர்கள் குழு

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் ...

Read More »

கடற்படையின் புதிய தளபதியாக தமிழர் நியமனம்..!

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் பிரதான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை  என்பதனால்  அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். எனினும்  இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இந்தநிலையில் அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.   எனவே இனிமேல்  எவரும் மும்மொழி மொழிச்சட்டத்தினை மீற முடியாது என்பதுடன்  எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது எனக்கூறவும் முடியாது எனவும் ...

Read More »

விஜயகலா கைது செய்யப்பட்டாரா? – விமல் வீரவன்ச

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியார்ளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே புதிய அரசியல் யாப்பு ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால் ...

Read More »

எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லை! – டெனிஸ்வரன்

நான் சுயமாக முன்வந்து எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லையென வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் ப. டெனிஸ்வரன் அறிவித்துள்ளார். தேவையாயின் முதலமைச்சரோ எனது கட்சியோ அதனை செய்யட்டுமென தெரிவித்துள்ள அவர் தான் சுயமாக பதவிவிலகப் போவதில்லை என சவால் விடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்ற் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். பா.டெனிஸ்வரன் தான் வகித்துவரும் அமைச்சு பதவியினை விட்டு விலக வேண்டுமென கூறிவரும் ரெலோவின் உயர்மட்டக்குழு கடந்த 12ம் திகதி வவுனியாவில் கூடி அவர் தனது முடிவை அறிப்பதற்கு ...

Read More »