Tag Archives: ஆசிரியர்தெரிவு

நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார்

நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார் என சிவில் சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சரத் வீரசேகரவிற்கு தொடர்புள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சிஐடியினரிடம் இது குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதியை நடைமுறைப்படுத்தும் அனைத்து அமைப்புகளும் அதனை அனைவருக்கும் சமமான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது சிவில் சமூகம் எழுச்சிபெற்றுள்ளது,இளைஞர் சமூகம் எழுச்சியுடன் காணப்படுகின்றது எவராவது தங்கள் ஊடக பலத்தையும்-இராணுவத்தையும் பயன்படுத்தலாம் என நினைத்தால் அது சாத்தியமில்லை ...

Read More »

மாவீரர்களின் நினைவு நாளை ஆயர்மன்றம் மாற்றியமைப்பது துயிலுமில்லங்களை தகர்த்தமைக்கு ஒப்பானது!

இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும். இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும். அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read More »

வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவியில் வாழ்ந்து வரும் 8 லட்சத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 826,000 பேர் வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவி மூலம் வாழ்க்கையை நடத்தும் நிர்ப்பந்தமான சூழலில் இருப்பதாக சமூகச் சேவைக்கான ஆஸ்திரேலிய கவுன்சிலின் Australian Council of Social Service(ACOSS) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதை இந்த அறிக்கையின் ஆய்வுத் தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 1991 மந்தநிலைக்குப் பின்னர் முந்தைய உச்சமாக 350,000 பேர் வேலையின்றி இருந்திருக்கின்றனர்.ஆனால், தற்போதைய எண்ணிக்கை அதைக்காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

Read More »

இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம்

ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும். சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது. ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இந்தியா பரிசாக கொடுத்த காந்தி சிலை உடைப்பு

கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர்ப்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு பரிசாக கொடுத்த அந்த சிலையை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தூதர் ராஜ்குமார் மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால், ...

Read More »

திருவுருச்சிலை உடைப்பு சம்பவம்; பெண்ணொருவர் கைது

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் இருதயநாதரின் திருவுருவச் சிலை என்பன  உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை காவல’ துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை காவல’ துறைனர் தெரிவிக்கின்றனர். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட திருவுருவச்சிலையும் உடைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, ...

Read More »

7 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார் அருட்தந்தை சிறில்

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், அருட்தந்தை சிறில் காமினி, 7 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (15) காலை 10 மணியளவில் சிறில் காமினி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி 07 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தையால், நாளை (16) மீண்டும் வாக்குமூலம் வழங்கப்படவுள்ளதாக ...

Read More »

பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழப்பு

பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழப்பு கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் பருவகால தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் உள்ள பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் இத்தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் சுரண்டல்களுக்கு உள்ளாவதாகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

Read More »

மெல்பேர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்ட அகதி டான் கான் விடுதலை!

ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான டான் கான் இன்று விடுதையாகிறார் என முன்னாள் தடுப்பு முகாம்வாசி பர்ஹத் பண்டேஷ் டீவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எந்த வித குற்றமும் செய்யாத டான் கான் எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்ததாக பர்ஹத் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார். இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார். இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார். கடந்த ...

Read More »