லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் இருதயநாதரின் திருவுருவச் சிலை என்பன உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை காவல’ துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை காவல’ துறைனர் தெரிவிக்கின்றனர்.
நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட திருவுருவச்சிலையும் உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின், குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமயலறைக்கு சென்ற பொழுது, அங்கிருந்த 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவரையும் காவல’ துறைனர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை காவல’ துறைனர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரரணைகைளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal