நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார்

நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார் என சிவில் சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சரத் வீரசேகரவிற்கு தொடர்புள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சிஐடியினரிடம் இது குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீதியை நடைமுறைப்படுத்தும் அனைத்து அமைப்புகளும் அதனை அனைவருக்கும் சமமான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது சிவில் சமூகம் எழுச்சிபெற்றுள்ளது,இளைஞர் சமூகம் எழுச்சியுடன் காணப்படுகின்றது எவராவது தங்கள் ஊடக பலத்தையும்-இராணுவத்தையும் பயன்படுத்தலாம் என நினைத்தால் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அன்று தெரிவித்ததையே இன்றும் தெரிவிக்கின்றோம் நாங்கள் கடவுளுக்கு மாத்திரம் பயப்படுகி;ன்றோம் – தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சுரேஸ் சாலேயை பார்த்தோ அல்லது புலனாய்வு பிரிவுகளை பார்த்தோ நாங்கள் அச்சமடையவில்லை அவர்களால் எங்களை மௌனமாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆர்மி முகடீன்- பொலிஸ் பையிஸ் முகமட் ஜஹ்ரானின் உறவினரான அன்சார் ஆகியோர் குறித்து குறிப்பிடுகின்றது இவர்கள் யார்? இவர்கள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் இல்லையா?புலனாய்வு பிரிவுகளிற்கு தொடர்பில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.