Tag Archives: ஆசிரியர்தெரிவு

தடைகளை தாண்டி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளையும் மீறி மாணவர்களால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில்  மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று (18) மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளை மேற் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு ...

Read More »

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமேசான் மழைக்காடுகள் அழிப்பு

ஐநா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22 சதவீதம் ஆகும். 2006க்கு பிறகு அதிகபட்சமாக, 2020-21ம் ஆண்டில் 13,235 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பருவநிலை ...

Read More »

ஆஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

Read More »

9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர்: ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த அகதி !

இந்த கணத்தை எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. 9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர். ஆனால் எனது நண்பர்கள் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறியுள்ளார் ஈரானிய அகதியான ஹமித் கதிமி. “எனக்கு இணைப்பு விசா கிடைத்து விட்டது. ஆனால் எனது சக நண்பர்களுக்கு (அகதிகளுக்கு) விசா கிடைக்கவில்லை. நாங்கள் ஒரே குடும்பம் போல, ஒன்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம்… இந்த அகதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும்.”

Read More »

இன்னுமா காணியை தேடுகிறீர்கள்?

கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மலையக பல்கலைக்கழகம் எங்கே என கேள்வி எழுப்பிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், இன்னுமா பல்கலைக்கழகம் அமைக்க காணியை தேடுகிறீர்கள்? எனவும் கேலி செய்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (17) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களால் குறுகிய காலத்திலேயே வெறுத்து ஒதுக்கிய அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.  எந்தவிதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டமாக இது இருக்கிறது எனவும் தெரிவித்தார். ...

Read More »

‘கிழக்கில் விஹாரை; பெரும்பான்மை குடியேற்றத்துக்கு வாய்ப்பு’

“பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், ...

Read More »

இழப்பீடு கோரி 10,000 ஆஸி. பிரஜைகள் பதிவு

கொவிட் 19′ தடுப்பூசியால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக 10,000 அவுஸ்திரேலியர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்து நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன. தடுப்பூசியைப் பெற்ற பின்னர், உடல்நலக் கோளாறுகள் இருந்தால், உரிய மருத்துவப் பதிவுகளுடன் புகார் அளிக்கலாம் என்று அவுஸ்திரேலியர்களுக்கு மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பில் மருந்து நிர்வாகத்துக்கு 79,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த 79,000 பேரில் 10,000 ...

Read More »

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டு சிறையில் ...

Read More »

ஈஸ்டர் தாக்குதல் – பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்று (16) இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உயிர்த்த ...

Read More »

இரு நாடுகள் இடையேயான போட்டி மோதலாக மாறக்கூடாது

இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் ...

Read More »