உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்று (16) இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமின் சகாக்களுடன் கடந்த காலத்தில் தொலைபேசியில் தொடர்பை பேணிவந்துள்ளவர்கள் தொடர்பான விசாரணையில் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காத்தான்குடி 4ம் பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் குறித்த நபரை சம்பவ தினமான நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்கான அழைத்துச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal