Tag Archives: ஆசிரியர்தெரிவு

அதிபர், ஆசிரியர்களின் அதிரடித் தீர்மானம்

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Read More »

யாழ். யுவதிக்கு உதவுமாறு பெற்றோர் உருக்கம்

யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சாஜினி என்ற 19 வயது யுவதிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அவருக்கு மிக விரைவாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது ஒரு சிறுநீரகத்தை தானம் வழங்க தாய் முன்வந்துள்ள போதிலும் சத்திரசிகிச்சை மற்றும் வைத்திய பாராமரிப்புச் செலவீனங்களை எதிர்கொள்ள முடியாது பெற்றோர் தவிர்க்கின்றனர். இதனால், தமது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கணக்கு இலக்கம் – 101075065585 (N.S.B) மேலதிக விவரங்களுக்கு தந்தை (சுரேஷ்) – 0778445767

Read More »

சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின், நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி-நோயாளர் மரணம்”என்பதை போன்றது என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், வரவு- செலவு திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள்,அறிவிக்கப்பட்டுள்ள செலவினங்கள்  தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த ...

Read More »

திறக்கப்படும் எல்லைகள்: கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆஸ்திரேலியா

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கம்போடிய நாட்டு எல்லைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கம்போடியாவும் ஆஸ்திரேலிய தூதரகமும் இணைந்து நவம்பர் 2 முதல் 25 வரை கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குகிறது. “கொரோனா தடுப்பூசிகள் குறித்து புரிந்து கொள்ள, தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் மற்றும் வாய்ப்புகள், மனித கடத்தல், முகங்களை ஒப்பிட்டு பார்க்கும் முறைகள் குறித்து குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்,” என கம்போடிய குடிவரவுத்துறை பேச்சாளர் General Keo Vanntha தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக காவல் துறை பிரிவு நிறுவப்படும்

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக சமூக காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள் ளன என்று வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார். இது குறித்து ஆளுநரின் பத்திரிகை செயலாளர் பத்திரிகை களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு, வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பிரஜா காவல்துறையினர் என்ற பெயரில் செயற்படவுள்ள இந்தத் திட் டத்தில் வேலையற்ற இளைஞர்கள் திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்தத் திட்டம் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வட ...

Read More »

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு

பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல. நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்ற பெண் தலைவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ ...

Read More »

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பாணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே கடந்த மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அருட்தந்தை சிறில் காமினிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், அவருக்குப் பதிலாக அன்றைய தினம் மூன்று அருட்தந்தை யர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினர். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

ஆஸ்திரேலியாவில்  முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை இன்றையதினம் 90 சதவீதத்தை எட்டுவதால், இன்றையநாள் மிக முக்கியமான மைல்கல் எட்டப்படும் நாளாக பதிவாகிறது என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார். Moderna-வின் mRNA கோவிட்-19 தடுப்பூசியான SPIKEVAX-ஐ, 6-11 வயதுக்குட்பட்டவர்கள் போட்டுக்கொள்வதற்கான தற்காலிக ஒப்புதலை Therapeutic Goods Administration வழங்கியுள்ளது. கோவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான தொடர்புகளைக் கண்டறியமுடியாதுபோனால், Gold Coast-இல் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk  தெரிவித்துள்ளார். ACT-இல் கோவிட் தொற்றுக்குள்ளான 33 பேர் கன்பராவில் இடம்பெற்ற சட்டவிரோத ...

Read More »

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா

சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை. டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். ...

Read More »

யாழில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரிப்பு:அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித் துள்ளதாக யாழ்.மாவட்ட அர சாங்க அதிபர் க. மகேசன் தெரி வித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளா வோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களைப் போல யாழ்.மாவட்டத்திலும் மீண்டும் கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித் ...

Read More »