குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே கடந்த மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அருட்தந்தை சிறில் காமினிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், அவருக்குப் பதிலாக அன்றைய தினம் மூன்று அருட்தந்தை யர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு குறித்த அருட்தந்தையர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal