யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித் துள்ளதாக யாழ்.மாவட்ட அர சாங்க அதிபர் க. மகேசன் தெரி வித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளா வோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களைப் போல யாழ்.மாவட்டத்திலும் மீண்டும் கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.
எனினும், பொது மக்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படு வதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal