ஸ்ரோபெரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் எனவும் இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் (Scott Morrison) எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் விற்பனையாகும் ஸ்ரோபெரி பழங்களில் மெல்லிய ஊசியை நுழைத்து விற்கப்படுவதாகவும் இவற்றினை வாங்கி உண்ட சிலருக்கு தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் விமைங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, ஸ்ரோபெரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
புதிய நிறத்தில் உருவாகும் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள்!
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில், பிக்சல் 3 மாடல்கள் புதிய நிறங்களில் உருவாக்கப்படுவது தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய கூகுள் ப்ரோமோ பக்கத்தில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனக்ளின் நிறம் தெரியவந்துள்ளது. புதிய டீசர் withgoogle.com என்ற இணைய முகவரி கொண்ட கூகுள் ...
Read More »சாவகச்சேரி நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளை!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் இன்று(19) காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போது வாளோடு உள்நுழைந்த கொள்ளையர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளார். உடனடியாக சாவகச்சேரி காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ...
Read More »பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புதல்!
வடகொரியாவில் உள்ள பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் அதிகரித்த நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். ...
Read More »பாக். பிரதமர் அலுவலகத்தின் 70 ஆடம்பர கார்கள் ஏலம்!
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றதும் அரசில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டார். பிரதமர் பங்களாவில் தங்காமல் ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார். ஆளுநர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் கூடாது என்றும் உத்தரவிட்டார். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ...
Read More »வெலிக்கடை மோதல் தொடர்பில் கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காவல் துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரன்ஜன் லமாஹேவா ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து ...
Read More »கைதிகள் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு பல உண்மைகளை மூடிமறைக்கிறது!
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறதென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனாலேயே பங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகிறதெனவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து நேற்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் ...
Read More »அவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி! – மக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஸ்ரோபரி பழங்களில் தையல் ஊசிகளை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. தையல் ஊசிகளை மறைத்த ஸ்ரோபரி பழங்களைக் கொள்வனவு செய்த 6 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். பொதுமக்கள் உண்ணும் பழங்களுக்குள் தையல் ஊசியை மறைத்து வைத்து மறைமுக தாக்குதல் நடத்தும் மிகவும் மோசமான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார். இவ்வாறு தையல் ஊசி வைக்கப்பட்ட ஸ்ரோபரிப் பழத்தினை உட்கொண்ட ...
Read More »நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதே கடினம்!
நாயகர்களை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதே கடினம் என நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படம் வெளியாகவுள்ளது. திருமணத்துக்குப் பிறகான தனது திரை வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள ஜோதிகா, நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள், அதில் நடிக்கும் நாயகிகளிடையே போட்டியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். நாங்கள் ...
Read More »ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு!
கல்குடாவில் எத்தனோல் மதுபான தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் அக்டொபர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். நான்காவது சாட்சியான ஏறாவூர் பொலிஸார் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். குறித்த தொழிற்சாலைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் ...
Read More »