தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் வீட்டினை புனரமைப்பு செய்வதற்கு 2 கோடியே 15 இலட்சம் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போதே இரா.சம்பந்தனின் வீட்டினை புனரமைப்பு செய்வதற்கு குறித்த நிதி கோரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவால் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. குறித்த குறைறைநிரப்பு பிரேரணையின் பிரகாரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணனுக்கு 3 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வடக்கு கிழக்கில் படையினருக்கு பதிலாக காவல்துறையினரை நியமிக்குமாறு கோரிக்கை!
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கருத்தரங்கில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் போரினை மீள ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் எவையும் இடம்பெறவில்லை படையினரால் பொதுமக்களின் வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. போரின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளவழங்குவதற்கு படையினரை குறைக்க வேண்டும் அவர்களுக்கு பதிலாக தமிழ் பேசக்கூடிய பொலீஸாரை ஈடுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
Read More »551 பேரைக் கோத்தாபய ராஜபக்ஷ கொலைசெய்தமைக்கான ஆதாரம் உண்டு!
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் கூலிப்படையை வைத்து 551பேரை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷ கொலைசெய்தார் என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இவரால் கடத்திக் கொலைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் தன்னிடமுள்ளதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல் நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக ...
Read More »‘நந்திக்கடலுக்கான பாதை’ போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!
சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கெதிரான வன்முறைகள் எவ்வாறு சிறிலங்காப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அந்நூலில் குறிப்பிட்டுள்ள விடயங்களைச் சுட்டிக்காட்டிய அவர் படையினர் தமது சகாக்களின் கொலைகளுக்கு பழிவாங்கும் வகையில் பொதுச் சொத்துக்களை அழித்ததாகவும், அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ...
Read More »அவுஸ்ரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமந்திரனின் படுகொலை வழங்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மார்ச் 22 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார். மேலும், குறித்த படுகொலைச் சதியுடன் ...
Read More »சம்பந்தன் – சுமந்திரனின் துரோகம்!
சுமந்திரன் ஜெனீவா சென்று இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகளைச் செய்துவிட்டு அதனை ஜனநாயகரீதியில் தாங்கள் முடிவெடுத்ததாக காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகமே நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (12) ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட அவர் தெரிவித்ததாவது, ஏற்கனவே ஒன்றரைவருடகால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காணாமல் போனவர்கள்தொடர்பாக இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை. தொடர்ச்சியாக மனித ...
Read More »யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வறுமைக்கோட்டில் முதலிடம்!
சிறீலங்காவில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்தின் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,229 ரூபாவுக்குக் கீழ் தனிநபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தனிநபர் ஒருவரின் மாத வருமானம், ...
Read More »27 வருட துன்பங்களிற்கு முடிவு கட்டுங்கள் – வலி வடக்கு பொது அமைப்புக்கள்
வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கின்ற மக்களுடைய காணிகளை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, ஊறணி, தையிட்டி ஆகிய கிராமங்களின் ஒன்றிணைந்த அமைப்பு, 27 வருட துன்பங்களை இந்த அரசாங்கமாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த சந்திப்பினை மேற்படி குழுவின் தலைவர் விஜயரட்ணம் ரட்னராஜா, செயலாளர் கந்தையா பாலசுப்ரமணியம் ஆகியோர் உட்பட குழுவின் அங்கத்தவர்கள் இணைந்து நடாத்தியிருந்தனர். ...
Read More »மிகச்சிறந்த பெண்ணிய தலைவர் பிரபாகரன் மட்டுமே! கஸ்தூரி
பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி என்ற அமைப்பை மகளிர் தினமான நேற்று (8) துவக்கியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமார் மகள், வரலெட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன், தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநர் என்னை தவறான கண்ணோட்டத்துடன் என்னை அணுகினார் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரத்குமார் மகள் ...
Read More »தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களைச் சந்தித்தார் மைத்திரி!
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டு இடம்பெற்றது. 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த இந்த மாநாட்டில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின்னர், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தென்னாபிரிக்க அதிபர் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal