பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி என்ற அமைப்பை மகளிர் தினமான நேற்று (8) துவக்கியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமார் மகள், வரலெட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்தார்.
சமீபத்தில் பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன், தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநர் என்னை தவறான கண்ணோட்டத்துடன் என்னை அணுகினார் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரத்குமார் மகள் வரலட்சுமி தைரியமாக ஒரு விசயத்தை கையில் எடுத்துள்ளார். பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
மகளிர் தினமான நேற்று இந்த அமைப்பை முறைப்படி ஆரம்பித்துள்ளார். மேலும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு கையெழுத்து இயக்கம் ஒன்றையும் இன்று ஆரம்பித்தார். இதில் ஏராளமான பேர் கையெழுத்து போட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் வரலட்சுமியின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். நடிகர் விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இவர்கள் தவிர இயக்குநர் மிஷ்கின், நடிகர் பிரசன்னா, அவரது மனைவியும் நடிகையுமான சினேகா, நடிகை தன்ஷிகா, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கஸ்தூரி 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகை. சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். தற்போது அமெரிக்காவில் கணவர், குழந்தைகளுடன் வசிக்கிறார். அவர் “ சேவ் சக்தி” அமைப்பு தொடர்பான பேட்டியின் போது “ மிகச்சிறந்த பெண்ணிய தலைவர் பிரபாகரன் மட்டுமே!” என்றார்
Eelamurasu Australia Online News Portal