Tag Archives: ஆசிரியர்தெரிவு

நத்தார் தினத்தன்று இடம்பெற்றது தற்கொலை தாக்குதலா?

அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் நத்தார் தினத்தன்று இடமபெற்ற வெடிப்பிற்கு தற்கொலை தாக்குதலே காரணம் என சட்ட அமுலாக்கல் கருதுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார்வெடித்துச்சிதறிய பகுதியில் மனிதஎச்சங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து விசாரணையாளர்கள் மரபணுபரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரின் வீட்டினை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது எனகருதுவதாக அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர். மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நபர் ஒருவரை தேடிவருவதாக சட்ட அமுலாக்கல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சந்தேகநபர் குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டுள்ளார் என கருதுவதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. ...

Read More »

வரலாறு நன்மையானதோ தீமையானதோ அவை ஆவணமயப்படுத்தப்பட வேண்டும்

“எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் முக்கியமாகக் கூறியவை வருமாறு; “இந்த நாட்டின் வடக்கு கிழக்கு ...

Read More »

புதிய வகை கொரோனாவுக்கு 7 அறிகுறிகள்

மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. அதன்பின் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதற்கிடையே இங்கிலாந்தில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கடும் ...

Read More »

ஐந்துசந்தியில் போராட்டம் – கஜேந்திரகுமார் பங்கேற்பு!

முஸ்லிம்களின் உடல் தகனத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் – ஐந்துசந்தி பகுதியில் இன்று (25) யாழ் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read More »

எத்தியோப்பியாவில் 100 பேர் படுகொலை

எத்தியோப்பியாவில் இனவாத மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல் அங்கு இன மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் நடந்த இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று எத்தியோப்பிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. பெனி‌ஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் உள்ள கிராமங்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பிரதமர் அபி அகமது ...

Read More »

யாழ்.முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை ஆதரிக்கத் தயார்

யாழ். மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தமது கட்சி தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால், அவரையும் ஆதரிக்கத் தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார். “யாழ் மாநகரசபை முதல்வருக்கு ஆர்னோல்ட்டைத் ...

Read More »

மருதனார்மடம் பொதுச்சந்தையில் பரவிய வைரஸ் மிகவும் வீரியம் கூடியது

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் நாள்களில் கிறிஸ்மஸ் மற் றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இந்தச் சூழ்நிலை யில் நாட்டில் கொரோனாத் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின் றது. அதிலும் தற்போது யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் ...

Read More »

இஸ்லாமாபாத்தில் கோயில் கட்ட இம்ரான்கான் அரசு அனுமதி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயிலைக் கட்டுவதற்கு கடந்த ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் குறித்த பணியானது சில அரசியல் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டது. இந் நிலையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு பின்னர் தற்போது அந் நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு இஸ்லாமாபாத்தில் குறித்த கோயிலைக்  கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில்  கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More »

சிறையிலிருந்து வீடு திரும்பவிருந்த யாழ். பல்கலை விரிவுரையாளருக்கு கொவிட்-19

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக் கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப் பட்டுள்ளார். இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: – கண்ணதாஸை வீட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ...

Read More »

வௌவாலுக்கு வைத்த துப்பாக்கிக் குறி தவறி தாதியைப் பதம் பார்த்தது

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ஆம் குறுக்கு வீதியில் எந்திரி ஒருவர் தாதியரின் மரத்தில் இருந்த வௌவால் மீது எயார்கண் துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி எதிர் வீட்டின் தாதி உத்தியோகத்தர் ஒருவர் மீது குண்டு பட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தொடர்புபட்ட எந்திரியைக் கைது செய்ததுடன் துப்பாகியை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் காவல் துறையினர்  தெரிவித்தனர். இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை யாற்றும் 55 வயதுடைய நடராசா ...

Read More »