நத்தார் தினத்தன்று இடம்பெற்றது தற்கொலை தாக்குதலா?

அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் நத்தார் தினத்தன்று இடமபெற்ற வெடிப்பிற்கு தற்கொலை தாக்குதலே காரணம் என சட்ட அமுலாக்கல் கருதுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கார்வெடித்துச்சிதறிய பகுதியில் மனிதஎச்சங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து விசாரணையாளர்கள் மரபணுபரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரின் வீட்டினை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது எனகருதுவதாக அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.

மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நபர் ஒருவரை தேடிவருவதாக சட்ட அமுலாக்கல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டுள்ளார் என கருதுவதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கொல்லப்பட்டுள்ளார் என கருதுவதாக சட்டஅதுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என்பதை உறுதி செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன என சட்ட அமுலாக்கல் பிரிவுகள் தெரிவித்துள்ளன என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை சந்தேகநபரின் தாயாரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என நியுஸ்வீக் தெரிவித்துள்ளது.