இஸ்லாமாபாத்தில் கோயில் கட்ட இம்ரான்கான் அரசு அனுமதி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயிலைக் கட்டுவதற்கு கடந்த ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் குறித்த பணியானது சில அரசியல் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டது.

இந் நிலையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு பின்னர் தற்போது அந் நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு இஸ்லாமாபாத்தில் குறித்த கோயிலைக்  கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து விரைவில்  கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன.