எத்தியோப்பியாவில் இனவாத மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல் அங்கு இன மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் நடந்த இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று எத்தியோப்பிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
பெனிஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் உள்ள கிராமங்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு பிரதமர் அபி அகமது சமீபத்தில் சென்றிருந்தார். அதன்பிறகே அங்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இது இன மோதல் காரணமாக ஏற்பட்ட படுகொலை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எத்தியோப்பியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது இனக்குழு அம்ஹாராக்கள் ஆகும். தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட இடம் அம்ஹாராக்கள் உள்ள பகுதிகள் ஆகும். சமீபத்தில் அவர்களை குறிவைத்தே அதிக அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
Eelamurasu Australia Online News Portal