பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!
நியூஸிலாந்தில் இடம்பெற்ற கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தனி நபர் ஒருவர் மேற்கொண்ட கோ துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் நியூஸிலாந்தில் கொண்டுவரப்பட்ட ஆயுத தடை சட்டத்தின்மூலம் பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளும் பொலிஸாரும் ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனவை!
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானவை என்றும், அவை பிரிவினையை விடுத்து சகிப்புத்தன்மையையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்புவோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்றும் பிரித்தானிய வேல்ஸ் இளவரசர் சாள்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். பிரித்தானியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற இம்மானுவேல் கிறிஸ்தவ கூட்டமொன்றில் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட சாள்ஸ், அவை ‘உலகெங்கிலும் உள்ள மதச்சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்’ என்றும் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் ...
Read More »யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றம்!
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது. அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டது. இந்தச் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் ...
Read More »பாலஸ்தீனத்தில் யுத்த குற்றங்கள் – விசாரணைகளை ஆரம்பிக்க சர்வதேச நீதிமன்றம் முயற்சி!
மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் ...
Read More »ஆஸ்திரேலிய மாகாணத்தில் கடும் வறட்சி – 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டதால் பரபரப்பு!
ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் ...
Read More »அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இல்லை!
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே கோத்தாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை வர்த்தகரீதியிலானது என்பதால் அது குறித்து மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என அவர் தெரிவித்;துள்ளார். எனினும் இந்த அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்;ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பு ...
Read More »ராஜிதவின் முன் பிணை மனு நிராகரிப்பு!
தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த முன் பிணை மனுவினை தலைமை நீதிவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.
Read More »பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் : ஐ.நா விடம் ஷா முகது குரேஷி
காஷ்மீர் எல்லையில் இந்தியா ஆயுதங்களை சேர்த்து வருகின்றது என ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகது குரேஷி தெரிவித்துள்ளார். கடந்து காலங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர் 6 தடவை ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளார். இந்தியா பல்வேறு ஏவுகணைகளை பரிசோதித்து, அவற்றை எல்லைப் பகுதியில் குவித்து வருகின்றது எனவும் , பாகிஸ்தான் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இவ் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் தலையிட்டு உரிய நடவடிக்கை ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!
அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சாரதியும் தியணைப்பு விரரும் ...
Read More »