பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் விளக்கமறியலில்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட ...
Read More »மாணவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும்; 15ஆம் திகதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், மஹாபொல புலமைப்பரிசில் நிலுவைப் பணம் எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படும். அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும்; 15ஆம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் ...
Read More »அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது!
அரசியல் விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது. ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. விளம்பரங்கள் என்ற பெயரில் பொய்பிரசாரம் செய்வதை தடுக்க முகநூல் நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க பாராளுமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ...
Read More »ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம்!
ஆஸ்திரேலியாவில் பற்றி எறியும் தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தன் தொப்பியை ரூ.5 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் ...
Read More »ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை!
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »அடுத்த வாரம் சிறிலங்கா வரும் அலிஸ் வெல்ஸ்!
அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்வரும் 13 – 22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 13 – 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அவர் கொழும்பில் தங்கியிருந்த உயர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் அலிஸ் வெல்ஸ் 15-18 ஆம் திகதி ...
Read More »தென்னாபிரிக்க விமானம் விபத்து!
தென்னாபிரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று கொங்கா குடியரசில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. கொங்கோ குடியரசில் கோமா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் இடப்பக்க இயந்திரம் ஒன்று தீப் பிடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனினும் விரைந்து செயற்பட்ட விமான நிலையத்தின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பாரிய சேத விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானபோது 59 பயணி ஐ.நா.வின் படையணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் இருந்துள்ளனர்.
Read More »ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு! குழந்தைக்கு பதக்கம் சூட்டும் நிகழ்வு!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 20 மாதம் நிரம்பிய மகளுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ‘O’Dwyer’ என்ற 36 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் O’Dwyer’ இன் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் O’Dwyer’ இன் 20 மாதம் நிரம்பிய மகளுக்கு உயரிய கெளரவ ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீ- 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு!
அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் முழு நாடுமே திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள ஒட்டகங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் அதிகளவு நீரை அருந்துவதைத் தடுத்து நிறுத்த அங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொல்லும் நடவடிக்கை இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனன்கு பிட்ஜன்ட்ஜட்ஜாரா யன்குனிட்ஜட்ஜாரா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் ஒட்டகங்களைக் கொல்வதற்கான இந்த உத்தரவை பிறப்பித்துள்னர். இதற்காக உலங்குவானூர்திகளில் உத்தியோகபூர்வமாக துப்பாக்கிச் சூட்டை நடத்துபவர்களை அனுப்ப ...
Read More »