கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட காவல் துறை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal