தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார். இது குறித்த அவரது அறிக்கை வருமாறு; “தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சவுதி அரேபியா வழியில் ஆஸ்திரேலியா: அகதிகள் விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனம்
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சோதனை நடத்தவும் அலைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரத்தை ஆஸ்திரேலிய எல்லைப்படைக்கு வழங்கும் விதமாகவும் புதிய மசோதாவை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளை தடைச் செய்ய அனுமதிக்கும் இந்த மசோதாவுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசா பெற்று வசிக்கும் சுல்தான் எனும் சவுதி அரேபியர், ஆஸ்திரேலியாவில் இந்த முயற்சி சவுதி அரேபியா போன்றே உள்ளதாகக் கவலைத் தெரிவித்துள்ளார். சவுதியில் ...
Read More »முன்னாள் இன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்ற தடை!
மட்டக்களப்பில் திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உட்படவர்களுக்கு இரவேடு இரவாக நேற்று (25) இரவு அவர்களின் வீடுகளுக்கு சென்;று நீதிமன்ற தடை உத்தரவை காவல் துறையினர் கையளித்துள்ளனர். தியாகதீபம் திலீபன் நினைவு தினம் செய்வதற்கு தமிழ் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசில் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய பற்றாளர்களுக்கு எதிராக கடந்த 12ம் திகதி முதல் ...
Read More »உண்ணாவிரதப் பகுதியில் சிறிலங்கா காவல் துறை குவிப்பு
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மேலும் பெருந்தொகையானவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள். இதேவேளையில் அப்பகுதியில் பேருந்துகளில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள அவர்களிடம் காவல் துறை கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள். அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த காவல் துறை , அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு காவல் துறையினர் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் ...
Read More »திட்டமிட்டபடி நாளை முழுநாள் உண்ணாவிரதப் போராட்டம்
திலீபனின் நினைவு தினமான நாளை தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல நாளை காலை முதல் மாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என யாழ். நகரில் இன்று மாலை கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவை மீறாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்த தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், இந்தப் போராட்டம் எந்த இடத்தில் நடத்தப்படும் என்பதை நாளை காலை போராட்டம் ஆரம்பமான பின்னர்தான் வெளியிடுவோம் எனத் தெரிவித்தார். தமிழ்த் ...
Read More »சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகம் முற்றுகை
சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பு இன்று நண்பகல் ஈழத் தமிழ் மக்களின் உரிமை கேட்டு கண்டனம் தெரிவிக்க சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன், அவைத் தலைவர் வில்லியப்பன், மார்ல துணைப் பொதுச்செயலாளர் பசீர், பச்சை தமிழகம் கட்சி அருள் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
Read More »உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை
செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டத்தரணி சுகாஸ் இதனைதெரிவித்துள்ளார். மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Read More »பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று ...
Read More »ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More »தியாகி திலீபனின் தீர்ப்புக்காக யாழில் மக்கள் காத்திருப்பு
திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இன்று மீண்டும் கூடி நீதிமன்றத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி எடுக்கப்படும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். திலீபன் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில் அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் ...
Read More »