தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மேலும் பெருந்தொகையானவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள்.
இதேவேளையில் அப்பகுதியில் பேருந்துகளில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள அவர்களிடம் காவல் துறை கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.
அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த காவல் துறை , அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு காவல் துறையினர் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.