திலீபனின் நினைவு தினமான நாளை தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல நாளை காலை முதல் மாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என யாழ். நகரில் இன்று மாலை கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
நீதிமன்றத் தடை உத்தரவை மீறாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்த தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், இந்தப் போராட்டம் எந்த இடத்தில் நடத்தப்படும் என்பதை நாளை காலை போராட்டம் ஆரம்பமான பின்னர்தான் வெளியிடுவோம் எனத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உட்பட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு இன்று மாலை எடுக்கப்பட்டது. நெல்வச்சந்திநி ஆலயத்தில் நாளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து இந்த முடிவை தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ளன.
Eelamurasu Australia Online News Portal