தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் விசேட காவல் துறை குழுவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய அலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வெலிகம பிரதேச வீடொன்றிலிருந்து 10 மி.ரூபாய் கண்டுபிடிப்பு!
வெலிகம- மதுராகொட பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அங்கிருந்த வீடொன்றின் கட்டிலுக்கு கீழே பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியனுக்கு அதிகமான பணத்துடன் வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பணத்தை சம்பாதித்த காரணத்தை அவர் வெளிப்படுத்த முடியாமல் போனதாலேயே வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை குறித்த வீட்டில் எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் சவுதியில் கணினி விற்பனை மய்யத்தில் பணியாற்றி வருகிறாரென்றும் அவரது மனைவி கடந்த டிசெம்பர் மாதம் ...
Read More »தற்கொலை குண்டுதாரியின் மோட்டார் சைக்கிள் மீட்பு!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபர், பயணித்ததாகக் கூறப்படும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 3 பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கை மூலம் இன்று திகாரிய பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நிட்டம்புவ காவல் துறை , கம்பஹா புலனாய்வு பிரிவுடன் இணைந்து நிட்டம்புவ பொலிஸ் நிலைய மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று திகாரிய பிரதேசத்தில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையையடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ...
Read More »கோத்தாபய அமெரிக்க குடியுரிமையை இழந்தார்!
தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் மனைவி – மகள் காயங்களுடன் மீட்பு!
இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் சஹ்ரானின் சகோதரி மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது, அம்பாறை சாய்ந்தமருது மோதலுக்கு பின்னரே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
Read More »ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி ….!
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்த விடுதியில் பெண்களுக்கு தான் முதல் முன்னுரிமை. பெண்களின் இருக்கைகள் நிறைந்த பிறகு, இடம் இருந்தால் மட்டும் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் ஆண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுக்கு கூடுதலாக 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆண்களிடம் இருந்து வசூலிக்கப்படும் இந்த கூடுதல் ...
Read More »அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது!
எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும், எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டும் உள் நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பினூடாகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களை அடுத்து அமெரிக்க அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுக்கு தெடர்ந்தும் ...
Read More »மட்டக்களப்பில் தற்கொலை தாக்குதலுக்கான ஒத்திகை!
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன. குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது. இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 18 ...
Read More »அம்பாறையில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் கண்டுபிடிப்பு!
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள் முற்றுகையிடப்படுள்ளன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிளில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 119 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »தோட்ட விடுதியிலிருந்து வோக்கிடோக்கி உட்பட பல உபகரணங்கள் மீட்பு!
மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டவிடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமானமுறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டப்பகுதிக்கு சொந்தமான விடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் மினசாரத்தின் ஊடாக பயன்படுத்துகின்ற உபகரணங்கள் சிலவற்றை நல்லதண்ணி காவல் துறையினர் நேற்று இரவு மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நல்லதண்ணி காவல் துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நல்லதண்ணி பகுதியில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த நான்கு வோக்கிடோக்கிகளும் ஏனைய ...
Read More »