தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன.
குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது.
இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடி காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஒத்திகைக்கு “டீயோ” ரக மோட்டார் சைக்கிள் ஒன்று பயன்டுத்தப்பட்டுள்ளமை காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Eelamurasu Australia Online News Portal