Tag Archives: ஆசிரியர்தெரிவு

முள்ளிவாய்க்காலில் நடந்தது “திட்டமிட்ட இனப்படுகொலை”

அவுஸ்ரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹாக் மெக்டெர் மொட் அவர்கள் ,முள்ளிவாய்க்காலில் நடந்தது “திட்டமிட்ட இனப்படுகொலை “ என்று தனது கருத்தை நீதியின் பக்கம் நின்று பதிவு செய்துள்ளார் .இது சர்வதேச தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது . ஈழத்தில் அரங்கேறிய இன அழிப்பு குறித்து தமிழின அழிப்பு நினைவு நாளில் நீதியின் குரலாக துணிச்சலோடு கருத்துவெளியிட்டதனால் ஹாக் மெக்டெர் மொட் (Hugh McDermont ) அவர்களை எதிர்த்து சிறீலங்கா அரசின் ஆதரவுடன் அவுஸ்திரேலியா வாழ் சிங்களர்களால் அவர் அங்கத்துவம் ...

Read More »

இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

60 அல்லது 65 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலம் கொழும்பு 07 பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பில் விவரங்கள் தெரியாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு

மன்னார், பேசாலை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை காவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை மீட்டுள்ளன. பேசாலை காவல் துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் காவல் துறை பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக ...

Read More »

அனலைதீவு கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள்…..

யாழ்ப்பாணம், அனலைதீவுப் பகுதி நேற்று முன்தினம் காலை முதல் கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேறவோ, கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவோ கடற்படையினர் அனுமதிக்க மறுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கடற்படையினர் இருவர் மீது மூவர் அடங்கிய குழுவொன்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களைத் தேடியே அனலைதீவு முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குழுவொன்றால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து கடற்படையினர் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவில் திங்கட்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு ...

Read More »

கொழும்பில் சிறிலங்கா காவல் துறையால் தூக்கி வீசப்பட்ட யுவதி!

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் ; கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் சிறிலங்கா காவல் துறை தலையீட்டினால் கலைக்கப்பட்ட போது, ; கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே காவல் துறை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் ; யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகு வலி காரணமாக அவர் இன்று காலி – கராப்பிட்டிய போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் போது இந்த யுவதியின் கைகள், கால்களை காவல் துறை  பிடித்து ...

Read More »

நாகவிகாரை மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் நாகவிகாரை மீது இனந்தெரியாத நபர்கள், இன்று (10) அதிகாலை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவகத்தையடுத்து, நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல், மோடடார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக காவல் துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More »

சுயாதீனமான தேர்தலுக்கு அரசாங்கமே இடையூறு !

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கம் முயற்சித்த போதிலும் அவற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் நலன் கருதி சுயாதீனமாகச் செயற்பட்டமையின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமே இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ;நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கேள்வி- தேர்தல்கள் ...

Read More »

ஜீவனின் பெயரே இல்லை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்று (9) வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ், முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்படாத நிலையிலும் விருப்பிலக்கம் வெளிவராத நிலையிலும், ஆறுமுகன் தொண்டமான், மே மாதம் 26ஆம் திகதியன்று திடீரென மரணமடைந்தார். அவருடைய ...

Read More »

சீனாவில் கொரோனா பரவலை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

சீனாவில் கொரோனா 2019 ஆகஸ்டிலேயே பரவத்தொடங்கி விட்டது என்ற தகவலை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியது எப்போது? – இந்தக் கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக இப்போது எதிரொலிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளி வந்தன. கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. இதில் உண்மைத்தகவல்களை வெளியிடாமல் சீனா மறைத்து ...

Read More »

சூம் தொழில்நுட்பத்தில் தகவல்கள் திருடப்படலாம்

தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் நவீன சூம் தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் ; (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு எச்சரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தவாறே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெருமளவான முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என்பன தமது கூட்டங்களையும் கல்வி நடவடிக்கைகளையும் இதனூடாகவே நடத்துகின்றன. இந்நிலையில் இதுகுறித்து இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

Read More »