மன்னார், பேசாலை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை காவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை மீட்டுள்ளன.
பேசாலை காவல் துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் காவல் துறை பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்ற பேசாலைப் காவல் துறை படைத்தரப்பினர் மற்றும் விசேட அதிரடிப் படைப்பிரிவு இணைந்து நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுத்தன
இதன்போது மீட்கப்பட்ட சந்தேகப் பொதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பொதியில் காணப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு பேசாலைப் காவல் துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் 2007ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டது என பேசாலை உதவி காவல் துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரனைகளை பேசாலை காவல் துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.