கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான ஸ்ரீதரனால் இது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதன்போதே ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய எம்.பிக்கள் இந்த தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர். அத்துடன் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
திருநெல்வேலியில் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 44 பேருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ...
Read More »இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்
இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை ...
Read More »உலகில் பாதுகாப்பான நகரம் ‘துபாய் – ஆய்வில் தகவல்
துபாய் காவல் துறை பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சூழ்நிலையை துபாய் நகரம் கையாண்டு வரும் விதமும் இதற்கு ஒரு காரணமாக திகழ்ந்து வருகிறது. துபாய் நகரம் தனது சமூக, ...
Read More »ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், தேவன் கான்வே- டாம் லாதம் ஜோடி அபாரமாக விளையாடியது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 271 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் விளாசினர். பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (20), ஹென்ரி நிக்கோல்ஸ் (13) ...
Read More »வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி நகரம்… 18000 பேர் வெளியேற்றம்
தொடர் மழையால் சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரம் சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 100 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிகளவு ஆகும். 1961-ம் ஆண்டு இதே போல மிக பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல ...
Read More »சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன. இந்நிலையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் ...
Read More »ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது
ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக பேசும்போது ஊடகங்களை பாராட்டும் அரசு காடழிப்பு குறித்து பேசும்போது ஊடகங்களை கண்டிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார் ஊடகங்களை இவ்வாறு ஒடுக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிவகித்தவேளை அவரது முகநூலை ஹக்செய் இளைஞன் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு அவரது திறமைக்காக பாராட்டப்பட்டார் ஆனால் இன்று காடழிப்பிற்கு எதிராக குரல்கொடுக்கும் இளைஞர்கள் ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத் திலிருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர் வெலிகம பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரி வித்தார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் குறித்த சந்தேகநபர் கைது செய் யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா பணம் ...
Read More »ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை… 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு
கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal