தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், தேவன் கான்வே- டாம் லாதம் ஜோடி அபாரமாக விளையாடியது.
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 271 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் விளாசினர்.
பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (20), ஹென்ரி நிக்கோல்ஸ் (13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தேவன் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 93 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
கேப்டனும், விக்கெட் கீப்பருமான டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 108 பந்தில் 110 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 48.2 ஓவரில் 275 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.