ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக பேசும்போது ஊடகங்களை பாராட்டும் அரசு காடழிப்பு குறித்து பேசும்போது ஊடகங்களை கண்டிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்
ஊடகங்களை இவ்வாறு ஒடுக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிவகித்தவேளை அவரது முகநூலை ஹக்செய் இளைஞன் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு அவரது திறமைக்காக பாராட்டப்பட்டார் ஆனால் இன்று காடழிப்பிற்கு எதிராக குரல்கொடுக்கும் இளைஞர்கள் குற்றவாளிகள் போல பார்க்கப்படுகின்றனர் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
காடழிப்பு போன்றவை குறித்து செய்தி வெளியிடுவது ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்கள் அவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.