உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத் திலிருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர் வெலிகம பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரி வித்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் குறித்த சந்தேகநபர் கைது செய் யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா பணம் மற்றும் மடிக் கணினியையும் காவல் துறை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
அத்துடன் குறித்த சந்தேகநபர் 42 வயதான மாவனெல்லை கிரிகங் தெணிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal