சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன.
இந்நிலையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அத்துமீறிய தலையீடாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது எனவும் சிறிலங்கா அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமர்வில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் அரசியல்மயப்பட்ட இரட்டை நிலைப்பாட்டையுடையதென ; ஜெனிவா அமர்வில் சீனா தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் சிறிலங்காவின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
நடுநிலையற்றசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக ஜெனிவாவில் ரஷ்யா அறிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.