Tag Archives: ஆசிரியர்தெரிவு

பட்டுப்பாதை திட்டம் குறித்து ஆலோசிக்க சீனா செல்கிறார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசு முறை பயணமாக அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு அனைத்து தரப்பிலும் நட்பு நாடாக இருக்கும் சீனாவிற்கு இம்ரான் கான் அடுத்த மாதம் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா செல்லும்போது இம்ரான் கானுடன் உயர்மட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள் என பாகிஸ்தான் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் வாழ்த்து தெரிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், அவரை சீனாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட நிசாம்தீன் பிணையில் விடுதலை!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்! – தவநாதன்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும், வட மாகாணத்துக்கான முழுமையான தேவை பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும், நில அபகரிப்பு இல்லாமல் மகாவலி நீர் வடக்கிற்கு வர வேண்டும், இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும் வரை வடமாகாணத்திற்கு வெளியே உள்ள மக்களை திட்டமிட்டு குடியேற்றுவதை நிறுத்த வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பானிய தூதரக அரசியல் விவகாரப் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அதிகாரியான யுனா மயெகாவா நேற்று மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் ஈழ ...

Read More »

போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ். பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவி்த்துள்ளது. அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஏற்கெனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ...

Read More »

கார் கதவை தானே சாத்திய இளவரசி – இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்!

லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று. ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது. ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு பல மொழிகளில் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக படகுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்திரேலிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை கமாண்டரும் விமானப்படைத் துணைத் தளபதியுமான Stephen Osborne எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; அவுஸ்திரேலியா தனது எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை, கடல்படை மற்றும் விமானப்படை ஆகியன அவுஸ்திரேலிய எல்லையை நோக்கிவரும் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்டுபிடித்து அவற்றை இடைமறிப்பதற்கான தமது நடவடிக்கைகளை ...

Read More »

‘பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்!- சாரு நிவேதிதா

‘பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ள ஓர் அற்புதம் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (செப்டம்பர் 28) ரிலீஸாக இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர் – ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக ...

Read More »

‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் சண்முகராஜ் நேர்காணல்!

ஜல்லிகட்டுப் போராட்டத்தில் பெரிய மக்கள் எழுச்சி எப்படி உண்டானது என்ற கேள்வியில் ஏற்பட்ட ஆர்வம்தான் ‘மெரினா புரட்சி’ என்று பேசத் தொடங்கிய இயக்குநர் சண்முகராஜுடன் ஒரு நேர்காணல். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்? அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் இந்தத் தாக்குதலுக்கு பின் னால் இவ்வளவு விஷயம் இருக் கிறதா என்று அதிர்ந்து போனார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் எப்படி யெல்லாம் தொடங்கியது என்பதற் காக நிறைய ஊர்களுக்கு ...

Read More »

உதவி செய்யப் போய் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கியவருக்கு உதவப் போன பெண் ஒருவர் மீது இன்னொரு வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும்போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதன்மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அப்போது சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த Emily (வயது 27) என்னும் பெண் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு உதவி செய்வதற்காக ஓடிச் ...

Read More »

அமெரிக்காவில் உளவு வேலை பார்த்த சீனர் சிக்கினார்!

அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றியது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சீனாவை சேர்ந்த ஜி சாக்குன் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். சீனாவை சேர்ந்தவர் ஜி சாக்குன் (வயது 27). அவர் மாணவர் விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் சிகாகோ நகரில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். 2015-ம் ஆண்டு மின் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். அமெரிக்காவில் குடியேறுகிற பிற நாட்டினர் அங்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய முடியும் என்பதால், ...

Read More »