ஜல்லிகட்டுப் போராட்டத்தில் பெரிய மக்கள் எழுச்சி எப்படி உண்டானது என்ற கேள்வியில் ஏற்பட்ட ஆர்வம்தான் ‘மெரினா புரட்சி’ என்று பேசத் தொடங்கிய இயக்குநர் சண்முகராஜுடன் ஒரு நேர்காணல்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் இந்தத் தாக்குதலுக்கு பின் னால் இவ்வளவு விஷயம் இருக் கிறதா என்று அதிர்ந்து போனார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் எப்படி யெல்லாம் தொடங்கியது என்பதற் காக நிறைய ஊர்களுக்கு பயணம் செய்தேன். அந்தப் போராட்டத்துக் கான தொடக்கப் புள்ளி தமிழகம் அல்ல, டெல்லிதான். அங்குதான் சில தமிழ் நண்பர்கள் அதைத் ஆரம் பித்து வைத்தார்கள் டெல்லியில் தொடங்கி சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோயம்புத்தூர் என அனைத்து ஊர்களுக்கும் பரவி யது அந்த எழுச்சி. இது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள அனைத்து ஊர்களுக்கும் பயணப் பட்டு, என்ன நடந்தது என்ற உண்மை யைத் தெரிந்து கொண்டேன். அப் படித் திரட்டப்பட்ட தகவலைகளை வைத்துக்கொண்டுதான் இந்தப் படத்தை ஆரம்பித்தேன்.
எப்போது படமாக்கத் தொடங்கினீர்கள்?
ஒளிப்பதிவுக் குழுவை கூடவே வைத்துக் கொண்டு, போகும் இட மெல்லாம் ஷூட் செய்துகொண்டே தான் போனோம். ஒட்டுமொத்தப் போராட்டம் முடிந்த பிறகு இதற்குள் இருந்த மர்மங்கள், சூழ்ச்சிகள், வஞ்சகங்கள், துரோகங்கள் என அனைத்தையும் சேர்த்து படமாக செய்திருக்கிறோம். இப்படத்தில் 70 சதவீதம் படமும் 30 சதவீதம் ஆவணப்படத்தின் சாயலும் இருக்கும்.
இதனைப் படமாக்கும்போது எதிர்கொண்ட சவால்கள்… என்னன்ன?
சென்னை, மதுரை, அலங்கா நல்லூர் ஆகியவற்றில் நடந்த போராட்டங்களுக்குள் எங்களது கேமராவைக் கொண்டு போய் வைத்து, தெரியாமல் ஷூட் பண்ணி னோம். நிஜத்துக்குள் நாங்களும் இருந்து பதிவு செய்துள்ளோம். உணர்வுகள், கோபங்கள், கோஷங் கள், உணர்ச்சி கொந்தளிப்புகள் என அனைத்துமே இதில் இருக்கும். இதுவே ஒரு சவாலான விஷயம் தான். 10 லட்சம் பேர் நடத்திய போராட்டத்துக்குள் நாங்களும் இருந்திருக்கிறோம் என்பதே ஓர் உணர்வுப்பூர்வ விஷயமாக கருதுகிறேன்.
8 லட்சம் பேர் சென்னையில் கூடினார்கள் என்கிறீர்கள். அவ்வளவு பெரிய கூட்டம் எப்படி கூடியது?
தலைவரே இல்லாமல் கூடிய கூட்டம் என்று அனைவருக்குள்ளும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், இந்த மெரினா புரட்சி எப்படி என்று ஆய்வு செய்தபோது, இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய கூட்ட மைப்பு தெளிவாக திட்டமிட்டு செய் திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் கூட்டமைப்பு ஒவ்வொரு புள்ளி யிலும் என்ன செய்தார்கள் என்பதை இப்படத்தில் அடையாளப்படுத்தி யிருக்கோம். இது தலைவர் இல்லாமல் கூடிய கூட்டம் அல்ல, அனைவருமே தலைவர்கள்தான். ஒவ்வொரு தலைவரையும் ஆதா ரங்களுடன் அடையாளம் காட்டி யிருக்கிறேன். அதிகார வர்க்கத் தினர் இது நடக்கக்கூடாது என்று காய் நகர்த்திக்கொண்டே இருந் தார்கள். அந்தக் காய் நகர்த்தலை இந்த இளைஞர் கூட்டம் ஒவ்வொரு முறையும் புத்திசாலித்தனமாக உடைத்தார்கள். அது அனைத்தை யுமே இப்படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளோம். படம் பார்க்கும்போது இப்படியெல்லாம் பின்னால் நடந்ததா என்று ஆச்சர்யப் படும் அளவுக்கு இருக்கும்.
அவ்வளவு பெரிய போராட்டம் முடிந்தது சர்ச்சைக்குரிய விஷயமானதேன்?
இப்படத்தில் சில உண்மையைச் சொல்லியிருக்கிறோம். உலகத் தில் தனிப்பட்ட ஒரு இன கலாச் சாரத்துக்காக இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது இல்லை. 8 நாள் சுமார் 192 மணி நேரம் எந்தவொரு வன்முறையுமே இல்லாமல் போராடியிருக்கிறார்கள் நமது இளைஞர்கள். அப்படியிருக்கும் போது கடைசி நாளில் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய வன்முறை வரும்? மக்கள் கூட்டத்துக்குள் இருந்து இந்த வன்முறை புறப்பட்டு வரவில்லை. வன்முறையை யார் நிகழ்த்தினார்கள் என்பதும் இப் படத்தின் மூலம் அடையாளம் காட்டி யுள்ளோம். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் நிறைய இப்படத்துக்குள் இருக் கிறது. சமூக விரோதிகள் என்ற பெயரில் சில பேர் உள்ளே புகுந்தார் கள். அந்த சில பேர் யார் என்பதும் இப்படத்தின் மூலம் தெரியவரும்.
பலரும் எங்களால்தான் கூட்டம் வந்தது என்று பேசினார்கள். இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் அவர்கள் யாருமே ஜனவரி 23-ம் தேதி அங்கு இல்லை. திரண்டவர்கள் யாருமே நீங் கள் குறிப்பிட்டவர்களுக்காக திரளவில்லை என்பதுதான் எனது கருத்து. 8 லட்சம் பேர் போராடி யிருக்கிறார்கள். அவர்களை வெறும் 18 பேர் மட்டுமே ஒன்று திரட்டியிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டியிருக்கிறேன். 18 பேருக்காகதான் 8 லட்சம் பேர் வந்தார்களா என்றால் இல்லை.