கட்சி தாவுவதற்கு தற்போது பேரங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பட்டாரவுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தன்னிடம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார. கட்சி தாவுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவின் மதிப்பில் 48 கோடி ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுபப்பினர் ரங்கே பண்டார சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
13 வருடங்களின் பின் விடுதலையான அரசியல் கைதி!
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சியினால் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சோ்ந்த தற்பொழுது மரணமடைந்துள்ளவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான் அல்லது சிவசங்கர் வினோதன் அல்லது சாள்ஸ் மாஸ்டர், கோமதி மதிமேகலாஆகியோருடன் இணைந்து சதி செய்து முன்னாள் வெளிவிவகார அமைச்சா லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்தமைக்கு உடந்தையாக செய்ற்பட்டதாக பயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் சகாதேவன், இசிதோர் ...
Read More »சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு ...
Read More »தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்!
கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் திகதி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் ...
Read More »பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது நாடாளுமன்றமே!-
சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் பலடினோ இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அவசியமான அரசமைப்பு நடைமுறைகள் குறித்தே அமெரிக்கா தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என ரொபேர்ட் பலடினோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் நாங்கள் ஜனாதிபதியை சபாநாயகருடன் கலந்தாலோசித்து பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் அரசாங்கத்திற்கு யார் தலைமை தாங்கவேண்டும் என்பதை ...
Read More »நாடாளுமன்றம் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படும்!- மஹிந்த
நாடாளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மீண்டும் 5 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்காக ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
Read More »மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!
பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் இடம்பெறு உள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் ஒருமுறை இடம்பெற்றது. 11 வது வருடமாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுகிறது. இதில் இந்தியா 14 வது இடத்தி பெறுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலையில் தீர்க்கப்படாத 18 வழக்குகள் உள்ளதாக குறிப்பிடபட்டு உள்ளது. இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் ...
Read More »மைத்திரியை அடுத்து சம்பந்தனை சந்தித்தார் ஐ.நா பிரதிநிதி !
சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், ...
Read More »நாடாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் விசேட திட்டம்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு இணங்காவிட்டால் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்த இறுதி முடிவையெடுப்பதற்கு முன்னதாக இன்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்தி;ப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தெரிவிக்கின்றனர் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை ...
Read More »இத்தாலியை தாக்கிய புயல்- வெனிஸ்நகரம் வெள்ளத்தில்!
ஐரோப்பிய நாடான இத்தாலியை கடுமையான புயல் தாக்கியது. புயல் காரணமாக வெனிஸில் பெய்த பலத்த மழையால் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற்று வீசியது. கடும் மழையும் கொட்டியது காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். சவோனோ என்ற இடத்தில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் ...
Read More »