சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் பலடினோ இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அவசியமான அரசமைப்பு நடைமுறைகள் குறித்தே அமெரிக்கா தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என ரொபேர்ட் பலடினோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் நாங்கள் ஜனாதிபதியை சபாநாயகருடன் கலந்தாலோசித்து பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் அரசாங்கத்திற்கு யார் தலைமை தாங்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் தங்கள் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பு அரசாங்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள ரொபேர்ட் பலடினோ இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு உள்ள பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது நாடாளுமன்றமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.