பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் இடம்பெறு உள்ளது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் ஒருமுறை இடம்பெற்றது. 11 வது வருடமாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுகிறது. இதில் இந்தியா 14 வது இடத்தி பெறுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலையில் தீர்க்கப்படாத 18 வழக்குகள் உள்ளதாக குறிப்பிடபட்டு உள்ளது.
இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. பத்திரிகையாளர்களின் கொலையாளிகளை தண்டிக்கப்படாத பட்டியல் 14 நாடுகளை உள்ளடக்கியது. 2 வது இடம் சிரியா, 3 வது இடம் ஈராக், 4வது இடம் தெற்கு சூடன், 5 வது இடம் பிலிப்பைன்ஸ், 6 வது இடம் ஆப்கானிஸ்தான், 7 வது இடம் மெக்சிகோ,8-வது இடம் கொலம்பியா, தொடர்ந்து பாகிஸ்தான்,பிரேசில் ரஷ்யா, வங்காளதேசம், நைஜிரீயா, இந்தியா உள்ளன.
ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினால் தீர்க்கப்படாத பத்திரிகையாளர் படுகொலைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதன் மூலம் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. செப்டம்பர் 1, 2008 மற்றும் ஆகஸ்ட் 31, 2018 வரை ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்களின் படுகொலைகளின் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டது. ஐந்து தீர்க்கப்படாத வழக்குகள் கொண்ட அந்த நாடுகள் மட்டுமே குழுவால் பரிசீலிக்கப்பட்டன.
இந்த பட்டியலில் போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் வழக்குகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் பற்றிய கவரேஜ் போன்ற ஆபத்தான பணிகளில் கொல்லப்பட்டவர்கள் இல்லை.
நவம்பர் 2 ம் திகதி ‘பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.