சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.