காணாமல்போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில் உறுதியாக உள்ளதாக காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போதல் எவ்வாறான நிலையில் இடம்பெற்றது அவ்வாறு காணாமல்போனவர்களிற்கு என்ன இடம்பெற்றது என்ற உண்மைகளை வெளிக்கொணர்வது குறித்து உறுதியாகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார் மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த விசாரணைகளிற்கு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் உதவுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார் விசாரணை நடவடிக்கைகளின் உயர்தராதரத்தை பேணுவதுடன் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டியதன் அவசியம் குறித்து உயர் அதிகாரிகளிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
‘ஒக்டோபர் 26’ சூழ்ச்சியின் முழு விபரம் விரைவில்…!
சிறிலங்காவை 50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் தொடர்புபடவில்லை. ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் முழுக் குடும்பமும் ...
Read More »மெல்போர்ன் பிட்ச் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது!
மெல்போர்ன் ஆடுகளம் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது. ஒருநாளைக்கு 200 ரன்கள் என்பது மிகக் கடினமானது என்று புஜாரா தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா சதம் அடித்தார். 280 பந்தில் சதம் அடித்த புஜாரா, 319 பந்தில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 204 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த ...
Read More »உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது!
ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது. ரஷ்யா மற்றும் ...
Read More »மட்டக்களப்பில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ,இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதன் ஆவனங்களை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார். இதையடுத்து கையளிக்கப்பட்ட காணி ஆவனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ...
Read More »மஹிந்தவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானது!
மஹிந்த ராஜபக்ஷவும் ஆளும் கட்சியின் பங்காளர் என்ற வகையில் அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு பின்னரே பொது தேர்தல் இடம்பெரும். அதுவரையில் பொது தேர்தலை நடத்தப்போவதுமில்லை. ஆனால் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இன்று ...
Read More »ஆழிப்பேரலை நினைவு தினம்!
நாவலடி ஆழி பேரலையில் காவு கொள்ளப்பட்ட உன்னத உயிர்களுக்கு இன்று சரியாக காலை 9.05 மணியவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பேரலையின்போது உயிர்களை நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்து வழிபாடுகளில் ஈடுபடும் நிகழ்வு இன்று காலை 9.5க்கு நாவலடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியில் இடம்பெற்றுள்ளது . குறித்த நாவலடி பகுதியில் ஆகக் கூடிய 568 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்த நிலையில் குறித்த பகுதிகளிலுள்ள ஆலயங்களில் நினைவு அஞ்சலி விளக்கேற்றி பூசைகள் இடம் பெற்றுள்ளது. ...
Read More »மத்தல விமான நிலையத்தில் தீ!
மத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தாக தெரிவித்துள்ளனர். குறித்த தீயானது சரக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திருந்து மத்தல விமானத்திற்கு வந்து இன்று காலை ஓமான் நோக்கி பயணம் செய்வதற்கு தயாரான நிலையில் தீ பரவியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விமானத்தில் ஏழு பேர் மாத்திரம் தங்கியிருந்ததாகவும் எவருக்கும் பாதிப்பில்லையெனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »ஆங்கிலக் கால்வாயில் படகுகளில் தத்தளித்த 40 அகதிகள் மீட்பு!
கிறிஸ்துமஸ் நாளில் ஆங்கிலக் கால்வாயின் வெவ்வேறு இடங்களில் தத்தளித்த 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர், படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆட்கடத்தும் கும்பல் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக அனுப்பி ...
Read More »ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர்தான் மிகவும் சிறப்பானது!
இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர்தான் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் விராட் கோலி என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மீது அந்நாட்டு ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது விராட் கோலி – டிம் பெய்ன் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்றது. இது ...
Read More »