மத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தாக தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயானது சரக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திருந்து மத்தல விமானத்திற்கு வந்து இன்று காலை ஓமான் நோக்கி பயணம் செய்வதற்கு தயாரான நிலையில் தீ பரவியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த விமானத்தில் ஏழு பேர் மாத்திரம் தங்கியிருந்ததாகவும் எவருக்கும் பாதிப்பில்லையெனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal